இந்தியா மற்றும் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன.
- இராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற புஷ்கரணி ஏரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையானதும் முதன்மையானதுமான பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை.
- குசராத் மாநிலத்தில், சோமநாதபுரம் கோயில் அருகில், இரண்யநதி- கபிலநதி-சரசுவதி நதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், கடற்கரையில் அமைந்திருந்த பிரம்மன கோயில், தற்போது கடலில் மூழ்கி விட்ட்து.
- தமிழ்நாட்டில், கும்பகோணம் நகரில் சரசுவதி-காயத்ரீ சமேதராக பிரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மட்டும் தான் இந்தியாவில், பிரம்மனுக்கு தினசரி பூசை செய்யப்படுகிறது. இதனை ’பிர்மன்’ கோயில் என்று உள்ளூரில் கூறுவர்.
- குருவன் என்ற குருவனம்-நாபிக் கமல தீர்த்தம் என்ற பெயரில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் பிரம்மனுக்கு பூசை இல்லை.
- பீகார் மாநிலம், கயாவிற்கு அருகில் பிரம்மயோனிகிரி எனுமிட்த்தில் ’கயாஸ்நீத்’ என்ற பெயரில் பிரம்மனுக்கு கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை.
- குசராத் மாநிலத்தில் நருமதை ஆற்றாங்கரையில் பிரம்மசீலா எனும் இடத்தில் உள்ள பிரம்மன் கோயிலுக்கு பூசை இல்லை.
- தமிழ்நாடு, திருப்பட்டூர் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை.
- தமிழ்நாடு, நாகப்பட்டினம், நாகப்ஷேத்திரம் எனுமிட்த்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
- மகாராட்டிர மாநிலத்தில், பேக்வா எனுமிட்த்தில் பிருத்தாக் என்ற பிரம்மன் கோயில் உள்ளது.
- இராஜ்குரூக் பகுதியில் வைபார் கிரி எனுமிட்த்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
- பேக்வா மாவட்டத்தில், பிருத்தாக் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
- வசந்த காட் எனும் ஊரில் பிரம்மன் கோயில் உள்ளது.
- கோமக்தக் என்ற பகுதியில் காரம்லி எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
- இந்தோனேசியா நாட்டில், யோக்கியகர்தா நகரில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இங்கு பிரம்மனுக்கு பூசை இல்லை.
- தாய்லாந்து நாட்டில் ஒரு பிரம்மன் கோயில் உள்ளது.
No comments:
Post a Comment