-கோவிலில் வழி படும் முறை
உள்ளே நுழையும் முன் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும் பின் உள்ளே கொடிமரத்தை வணங்க வேண்டும்,
பிறகு நந்தீஸ்வரர்,கணபதி ,தக்ஷ்ணாமூர்த்தி,சண்டீகேஸ்வரர்,துர்க்கை,முருகன்,பைரவர்,நவக்கிரஹம், ஆகிய
இவர்களை வணங்கி விட்டு உள்ளே காவலாளிகள் இருவர் (ஜெயன்,விஜயன்) இவர்களையும் வணங்கி விட்டு
பின் இறைவனையும், அம்மனையும் வணங்க வேண்டும்.அப்பொழுதுதான் நம் பிரார்த்தனை சரியாக நிறைவேறும்.மேலும்
அமர்ந்து எழுந்தஉடன் பின் புறம் தட்ட கூடாது.கொடிமரத்து முன் நின்று வடக்கு திசை நோக்கி வணங்க
வேண்டும். தெய்வ சிந்தனை மட்டும் இருக்க வேண்டும். வெளியில் வந்து பிச்சை போடகூடாது,முடிந்தால் உள்ளே செல்லுமுன் பிச்சை போடவேண்டும்.நேராக வேறு எங்கும் செல்லாமல் வீட்டிர்கு செல்வது நல்லது.
மேலும் உடனே கை கால் அல்லம்பாமலும், குளிதல்லும் தவிர்க்க வேண்டும். ஆக நாம் இவற்றை முறையாக
பின் பற்றிநால் நம் பிரார்தனைக்கு முழு பலன் கிட்டும்.
இந்த கிழமைகளில்வரும்நட்சத்திரங்களில்நல்லகாரியங்கள்செய்யக்கூடாது
குடும்பத்திற்கு ஆகாத நட்சத்திரங்கள்
பெண் நட்சத்திரம் மூலமானால் மாமனாருக்கு ஆகாது
பெண் நட்சத்திரம் ஆயில்யமானால் மாமியாருக்கு ஆகாது
பெண் நட்சத்திரம் கேட்டையானால் மூத்த மைத்துனருக்கு ஆகாது
பெண் நட்சத்திரம் விசாகமானால் இளைய மைத்துனருக்கு ஆகாது
வீடு கட்ட ஏட்ற திசையும்,நட்சத்திரங்களும்
கிழக்கு திசையில் வீடு கட்ட ரோகிணி,மிருகசிரிஷம்,புனர்பூசம்,பூசமும்;
தெற்கு திசையில் வீடு கட்ட மகம்,சுவாதி,ஹஸ்தம்,உத்திரமும்;
மேற்கு திசையில் வீடு கட்ட உத்திராடம்,திருஒணம்,மூலமும்;
வடக்கு திசையில் வீடு கட்ட அவிட்டம்,உத்திரட்டாதி,சித்திரை,சதயமும் உத்தமம்.
ரேவதியில் எல்லா திசைகளிலும் வீடு கட்டலாம்.
இந்த திதி மற்றும் நட்சத்திரம் வரும் நாட்களில் நல்ல காரியம் செய்யகூடாது
ஞாயிறு
சதுர்த்தி, திருவாதிரை, சுவாதி, பூசம்
செவ்வாய்
நவமி, ஹஸ்தம், கேட்டை, பூராடம்
சனி
சதுர்த்தி, மகம், பரணி, பூரட்டாதி
கல்வி மற்றும் தொழில்
12 இல் கிரகங்கள் இருந்தால் அடுத்தபிறவி
சூரியன்,சந்திரன்
கைலாய லோகம்.
சுக்கிரன்
சொர்கலோகம்.
செவ்வாய்
பூலோகம்
புதன்
வைகுண்ட லோகம்
சனி
அமர லோகம்
.
குரு
பிரம்ம லோகம்.
ராகு,கேது
ஆவி லோகம்.
நல்லகாரியம் செய்யக்கூடாத மாதங்கள்
ஒரு மாதத்தில் 2 அமாவாசை 2 பௌர்னமி வந்தால் மல மாதம் அல்லது விஷ மாதம் எனப்படும்.
அந்த மாதத்தில் எந்த நல்ல காரியத்தயும் செய்யக்கூடாது.
ஜுரநாதர்
திருப்பரம்குன்றம் அறுபடை வீட்டில் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும்.அங்கு மற்றும்
ஒரு முக்கியமானவரும் உள்ளார் அவர்தான் ஜுரநாதர். இவர் முருகனுக்கு இடப்பக்கதில் அமர்ந்து
இருக்கிரார்.கடுமையான ஜுரம், விஷ ஜுரம், மற்றும் பல்வேறு ஜுரங்களினால் ஏற்படும் பாதிப்பு காலங்களில் (இவரை அர்ச்சனை செய்து ப்ரார்தித்தால்)
பாதிப்பில் இருந்து காக்கிரார்
இதை முடிக்காமல் கிரக பிரவேசம் செய்யக்கூடாது
மேற்க்கூரை போடாமலும்
கதவு போடாமலும்
சுவர்,தரை பூசாமலும்
பஞ்சம், மஹாயக்ஞம் செய்யாமலும்
பிராம்மண போஜனம் செய்விக்காமலும்
கிரக பிரவேசம் செய்யக்கூடாது
ஜோதிட துளிகள்
பரணி தரணி ஆளும்
தில்லு முல்லு திருவாதிரை
மகத்து பெண் ஜகத்தில் கிட்டாது
மகத்தில் புக்கதோர் சனி
உதிரத்தில் ஓர் பிள்ளை ஊர் கோடி இல் காணி நிலம்
ஹஸ்தம் தொட்டதெல்லாம் பஸ்மம்
சித்தரை அப்பன் தெருவிலே
கேட்டை கோட்டை கட்டி வாழும்
ஆண் மூலம் அரசாளும்
பெண் மூலம் நிர்மூலம்
பூராடம் போராடும்
திருவோணத்தான் உலகாள்வான்
அவிட்டம் தொட்டது எல்லாம் தனம்
சதயம் சொந்த புத்தி கிடயாது சொல் பேச்சு கேட்காது
பழமொழி
எதற்கும் மீனம் மேஷம் பார்கதே
நாளும் கோளும் நலிந்தாற்கு இல்லை
ராகு கொடுப்பான் கேது கெடுப்பான்
நாள் செய்வதை நல்லோர் செய்யார்
குரு பர்ர்க்க கோடி நன்மை
ஓடி போனவனுக்கு ஒன்பதில் குரு
பத்தில் பார்ப்பான் பதவியை கெடுப்பான்
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி
கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம்
ஜோதிட துளிகள்
.
நாடி சோதிடம் என்பது ஒருவருடைய கைரேகையைக் கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து அதிலுள்ள அவர் தொடர்பான விடயங்களை வாசித்து விளக்கி கூறுவதாக நம்பப்படும் ஒரு கலையாகும். இதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.
ஆண்களாயின் வலது கட்டைவிரல்(பெருவிரல்) கைரேகையும் பெண்களாயின் இடது கட்டைவிரற் கைரேகையும் பெறப்படுகிறது
ஆண்களாயின் வலது கட்டைவிரல்(பெருவிரல்) கைரேகையும் பெண்களாயின் இடது கட்டைவிரற் கைரேகையும் பெறப்படுகிறது
நட்சதிரங்களின் வடமொழி சொல்
அஸ்வதி அஸ்வனி
பரணி அபபரணி
கார்த்திகை கார்த்திகை
ரோகிணி ரோகிணி
மிருக்சிரிடம் மிருகசிரா
திருவாதிரை ஆருத்ரா
புனர்பூசம் புனர்வசு
பூசம் புஷ்யம்
ஆயில்யம் அஷ்லேஷ
மகம் மகா
பூரம் பூர்வபல்குனி
உத்தரம் உத்தரபல்குனி
ஹஸ்தம் ஹஸ்தம்
சித்திரய் சித்திரய்
சுவாதி சுவாதி
விசாகம் விசாகா
அனுஷம் அனுராதா
கேட்டை ஜேஷ்ட
மூலம் மூலா
பூராடம் பூர்வஷாட
உத்திராடம் உத்திரஷாட
திருஓணம் ஸ்ரவணம்
அவிட்டம் தனிஷ்ட
சதயம் சதபிஷக்
பூரட்டாதி பூர்வபாத்ரபத
உத்தரட்டாதி உத்தரபாதரபத
ரேவதி ரேவதி
சந்திராஷ்டமம்
தங்கள் நட்சதிரத்தில் இருந்து எண்ணி 17 ஆவது நட்சத்திரம் உள்ள தினம் சந்திராஷட்டமம் ஆகும். இது மிகஉம் துல்லியமாக கணிக்கபடுகிறது. சிலர் ராசியை வைத்து பார்க்கும் பொழுது
தங்கள் ராசிக்கு 8 ஆம்.இடத்தில் சந்திரன் வரும் நாள் சந்திராஷட்டமம் ஆகும்.
உதாரணம்;அஸ்வினிஇல் சந்திரன் இருக்கும் பொழுது அனுஷம் நட்சதிரம் உள்ளவர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.அதாவது மேஷத்தில் சந்திரன் இருக்கும் பொழுது விருச்சிக ராசிகாரர்களுக்கு சந்திராஷ்ட்டமம் ஆகும். அன்று மௌன விரதம் இருநது இறைவனை வழி பட்டால் பல இன்னல்லில் இருந்து விடுபடலாம்
. ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை?
ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.
அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.
“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.
“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.
“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”
>
பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”
பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.
கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.
ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.
“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் .
சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.
சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.
அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட
வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு
மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு
போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.
>இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.
வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத்
தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.
>வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை
நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.
எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.
பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்
நூலின் தலைப்பு : மஹா பெரியவா
>நூலாசிரியர் : பி. சுவாமிநாதன்
ஜோதிட சிந்தனை
கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம். என்பது நடைமுறை சொல்.அதை நாம் சரியான முறயில் சிந்திதால்
ஒரு கல்லை நாயாக சிலையாக்கி அந்த சிலையை நாயாக பார்த்தல் அதில் கல் தெரியாது. அதை கல்லாக பார்த்தல் நாய் தெரியாது.இதைத்தான் கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்.என்று இந்த சொல்லை தவறாக பயன்படுதுகின்றோம்.
இதன் தத்துவம் என்னவென்றால் நாம் இறைவனை வழி படும் பொழுது ஒரு முக சிந்தனயுடன் காண வேண்டும.இல்லை எனில் அது நமக்கு வெறும் கல்லாகத்தான் தோன்றும்
MASTER NUMEROLOGY SOFT FOR U
(MASTER NUMEROLOGY SOFT) இது மிகவும் பயன்உள்ளதாக இருக்கும் இதை DOWNLOAD செய்ய கீழே LINK கொடுக்கபட்டுஉள்ளது. உங்கள் பெயர் ராசியைநீங்களே தெரிந்து கொள்ளலாம். ENJOY.
உங்கள் கருத்துக்களை EMAIL மூலம் அல்லது கமென்ட்டாகவோ அனுப்பவும். http://www.mediafire.com/?dm8s2q398h3
முக்கியமான 5 பௌர்நமிகள்
சித்திரை மாதத்தில் வரும் பௌர்நமி சித்திரா பௌர்நமி
வைகாசி மாதத்தில் வரும் பௌர்நமி வைகாசி விசாகம்;
ஆவணி மாதத்தில் வரும்பௌர்நமி ஆவணி அவிட்டம்;
மாசி மாதத்தில் வரும் பௌர்நமி மாசிமகம்;
பங்குனி மாதத்தில் வரும் பௌர்நமி பங்குனி உத்திரம்
தீதுருமாதங்கள்
ஆடி மாதம் ராவணன் வீழ்ச்சி;
ஆவணி மாதம் மகாபலி சக்கரவர்த்தி வீழ்ச்சி;
புரட்டாசி மாதம் இரணியன் வதம்;
மார்கழி மாதம் பாரத போர்;
மாசி மாதம் சிவன் நஞ்சு உண்டல்;
பங்குனி மாதம் மன்மதன் உயிரோடு எரிதல்;
இந்த மாதங்களில் பொதுவாக புதுமனை புகுதல்,வீட்டை காலி செய்தல்
இவற்றை தவிர்ப்பது நல்லது.
யுகத்தின் கணக்கு
சூரிய சித்தாந்தபடி கிருத யுகம்,திரேதா யுகம்,துவாபர யுகம்,கலி யுகம் எனப்படும்.4 யுகங்களை கொண்டது
ஒரு சதுர் யுகம். ஒரு சதுர் யுகம் என்றால் 43 ,20 ,௦௦௦ ௦௦௦௦000 ஆண்டுகள் ஆகும்.
71 சதுர் யுகங்கள்_1 மன்வந்தரம்
14 மன்வன்தரங்கள்_1 கல்பம்
1 கல்பம் என்றால் பிரம்மாவுக்கு 1/2 நாள்.
நாம் இருப்பது 7 ஆவது மன்வந்தரம்.இது வைவஸ்தவ மன்வந்தரம் எனப்படும்.அதில் சுவேத வராஹ் கல்ப்பமாகும். இப்போதைய பிரம்மா 50 ஆண்டுகளை முடித்து 51 ஆம் ஆண்டுகளில்
உள்ளார். கலி பிறந்து 5079 ஆண்டுகள் ஆகின்றன
எண்ணெய் ஸ்நானம் செய்யவேண்டிய நாள்
ஞாயிற்று கிழமை அழகு போகும்;
திங்கட் கிழமை மனசஞ்சலம்;
செவ்வாய் கிழமை சரீர பிரச்சனை மற்றும் பயங்கரம்;
புதன் கிழமை திரவிய லாபம் மற்றும் நல்ல நாள்;
வியாழ கிழமை மன சங்கடம்;
வெள்ளி கிழமை பெண்களுக்கு நலம்;
சனி கிழமை நல்ல நாள்;
வெந்நீர் ஸ்நானம் (குளியல்)
அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, சங்கராந்தி இந்த நாட்கள் மற்றும் ஜனனம், மரணங்களால் ஏற்படும் (ஸு தகம்)தீட்டுக்காலங்களிலும் வெந்நீர் ஸ்நானம் (குளியல்) செய்யக்கூடாது. செய்தால் ரௌரவம் என்ற நரகத்தை அடைவான் என்று சாஸ்திரம் கூறகிறது
தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்.
பரணி,கிர்த்திகை,திருவாதிரை,ஆயில்யம் , பூரம்,பூரட்டாதி,பூராடம்,விசாகம்,ஆகிய நட்சத்திரங்களில்,
சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஜோதிடருக்கும்,ப்ரோகிதருக்கும் உள்ள வித்தியாசம்
ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து(பரிகாரம் முதலியவை) என்ன செய்யவேண்டும் என்று கூருபவர் ஜோதிடர்.
அதை(ஹோமம் மற்றும் பரிகாரங்களை)எப்படி செய்யவேண்டும் என்று கூருபவர் ப்ரோகிதர்.
தவிர்க்க வேண்டிய நாட்கள்
சந்திரன் கும்பத்தில்,மீனத்தில் இருக்கும்பொழுது வீடு கட்டுதல்,தகனம் செயதல்,தெற்குபக்கம் பயணம் செயதல்,
முதலியவை தவிர்க்க வேண்டும்.
கிரகங்களின் அதி தேவதைகள்
சூரியன்
சிவன்
சந்திரன்
பார்வதி
செவ்வாய்
முருகர்
புதன்
விஷ்ணு
குரு
பிரம்மா,தக்ஷ்ணாமூர்த்தி
சுக்கிரன்
லக்ஷ்மி,இந்திரன்
சனி
யமன்,சாஸ்தா
ராகு
காளி,துர்கை
கேது
விநாயகர்,சண்டிகேஸ்வரர்
மனை கோல ஆகாத நாட்கள்
பரணியுடன் கூடிய ஞாயிறு
சித்திரையுடன் கூடிய திங்கள்
உத்திராடத்துடன் கூடிய செவ்வாய்
அவிட்டத்துடன் கூடிய புதன்
கேட்டையுடன் கூடிய வியாழன்
பூராடத்துடன் கூடிய வெள்ளி
ரேவதியுடன் கூடிய சனி
ராசிக்கு ஏற்ற திசை
மேஷம்_வடக்கு
ரிஷபம்_தெற்கு
மிதுனம்_மேற்கு
கடகம்_கிழக்கு
சிம்மம்_வடக்கு
கன்னி_தெற்கு
துலாம்_எல்லா திசைகளும்
விருச்சிகம்_கிழக்கு
தனுசு_வடக்கு
மகரம்_தெற்கு
கும்பம்_ மேற்கு
மீனம்_கிழக்கு
கிரகங்களின் நிலை
ஒருவன் இப்பூமியில் பிறக்கும் சமயத்தில் அமைகிற மற்றும் அமைந்துள்ள கிரகங்களின் நிலைகள் அவன் நல்லவனா,தீயவனா,அறிஞனா,மூடனா,நீண்ட ஆயுள் உள்ளவனா,அல்லது
அற்ப ஆயுளா,நோயுற்றவனா,ஞானியா என்பதை அறிவிப்பதே கிரகங்களின் நிலை ஆகும்.
நன்மை
தினந்தோறும் உரியகாலத்தில் (காலை வேளயில்) திதி,வாரம் நட்சத்திரம்,யோகம்,கர்ணம்
இவ்வைந்து அங்கங்களை அறிகிரவருக்கு நன்மைகள் பல வந்து சேரும்.
ஹோரயில் விஷ காலம்
புதன்,சனி ஹோரைகளில் ஆரம்ப காலமும் சந்திர,சுக்கிர ஹோரைகளில் மத்யம காலமும்
செவ்வாய்,சூரியன்,குரு ஹோரைகளில் கடைசி காலமும் விஷ காலமாகும்.
பட்சங்கள்
அமாவாசையில் இருந்து பௌர்நமி சுக்லபட்சம்(பூர்வபட்சம்)
பௌர்நமியில் இருந்து அமாவாசை கிருஷ்ணபட்சம்(அமரபட்சம்)
திருமணம்
அண்ணனுக்கு திருமணமான ஆறு மாதத்தில் தங்கைக்கு திருமணம் செய்யக்கூடாது
குரு பலம்
குரு கோசாரப்படி 2 ,5 ,7 ,9 ,11 ஆகிய இடங்களில் இருந்தால் குரு பலம் ஆகும்.
சூரியன் ராசியில் நிற்கும் மாதம்
சித்திரையில்_ மேஷத்தில்
வைகாசியில்_ ரிஷபத்தில்
ஆனியில்_ மிதுனத்தில்
ஆடியில்_கடகத்தில்
ஆவணியில்_சிம்மத்தில்
புரட்டாசியில்_ கன்னியில்
ஐப்பசியில்_துலாமில்
கார்த்திகையில்_ விருசிகத்தில்
மார்கழியில்_ தனுசுவில்
தையில்_ மகரத்தில்
மாசியில்_ கும்பத்தில்
பங்குனியில்_மீனத்திலும் இருப்பார்
நல்ல காரியம் செய்யக்கூடாத நாட்கள்
கிரகணதிர்க்கு(சூரியன் அல்லது சந்திரன்)மூன்று நாள் முன்னும் மூன்று நாள் பின்னும் நல்ல காரியம் செய்யக்கூடாது.
அவமா
ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று திதிகள் வந்தால் அதற்கு அவமா என்று பெயர்.அன்று நல்ல காரியங்கள்
செய்வதை தவிர்ப்பது நல்லது.
கல்வி மற்றும் தொழில்
கல்வி மற்றும் தொழில்
நட்சத்ரம் | கல்வி, தொழில் |
ராகு,கேது | பலதொழில்ஜீவனம் |
சனி | அடிமை தொழில் |
புதன்,சுக்கிரன் | சார்டர்ட்அகௌன்ட்டட் |
புதன்,குரு | வக்கீல்,நீதிபதி |
குரு,புதன்,சுக்கிரன் | எம்பிஏ,தொழில்அதிபர் |
செவ்வாய்,புதன்,சூரியன் | சர்ஜன்,டாக்டர் |
செவ்வாய்,புதன் | இன்ஜிநியரிங் |
கிழமை | நட்சத்ரம் |
ஞாயிற்று கிழமை | பரணி |
திங்கள் கிழமை | சித்திரை |
செவ்வாய் கிழமை | உத்திரம் |
புதன் கிழமை | ஹஸ்தம் |
வியாழன் கிழமை | கேட்டை |
வெள்ளி கிழமை | பூரட்டாதி |
சனி கிழமை | ரேவதி |
No comments:
Post a Comment