Thursday, July 4, 2013

திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில்

திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில்(இடங்களில்) ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமே. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் பிரம்மனை நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளினார் என்பது தொன்நம்பிக்கை.

No comments:

Post a Comment